20ஆவது திருத்தச் சட்டம்; மு.கா தீர்மானங்கள் எடுக்கவில்லை - ஹாபீஸ் நசீர்

 


20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள நிலையில், அது தொடர்பில் நேற்று (29) இரவு ஏறாவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு இந்த நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன. நாங்களும் தேசிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவளிக்கும் அதேவேளையில், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளையும் அபிலாஷைகளையும் அபிவிருத்தியையும் வென்றெடுக்கின்ற பொறுப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்றது” என்றார்.

“அரசாங்கத்துக்குள் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் மூன்றில் இரண்டை அடைவதற்கு பல உறுப்பினர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

“இந்நிலையில் ஒரு சிறுபான்மை கட்சியாக இருக்கின்ற நாங்கள், ஓட்டு மொத்த முஸ்லிம் எம்.பிக்களும் பேசவேண்டிய நிலையிலும் இணக்கப்பாட்டுடனான முடிவை எடுத்து சரியான நிலைப்பாட்டை எடுப்போமானால், முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்கின்ற விடயமாக இருக்கும்.

“முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் நீதிமன்றம் சென்ற விவகாரம் குறித்து எனக்குத் தெரியாது. இருந்தபோதிலும் கட்சியென்ற அடிப்படையில், நாங்கள் எந்தத் தீர்மானத்தையும் இதுவரை  எடுக்கவில்லையென்பதை எங்களால் தெளிவாகக் கூறமுடியும்” என்றார்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்