திருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள்

 




 எப்.முபாரக்  2020-10-28


திருகோணமலை மாவட்டத்தில் 09 கொரோனா தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(27)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புபட்ட 283 பேருக்கு இன்று வரைக்கும் பீ.சிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், திருகோணமலைமாவட்டத்தில் 132 பேருக்கும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 பேருக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உட்பட்ட பொத்துவில், கல்முனை தெற்கு போன்ற பகுதிகளில் 76 பேருக்கும் பீ.சிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் இன்று வரைக்கும் 46 கொரோனா தொற்றாளர்கள் இணங் காணப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 28 பேரும், கல்முனையில் 09 பேரும் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் காத்தான்குடி தள வைத்தியசாலையில் 180 பேரும், கரடியனாறு ஒரு நாள் சிகிச்சை நிலையத்தில் 87 பேரும், ஈச்சிலம்பற்று வைத்தியசாலையின் 92 பேரும், பதியதலாவ வைத்தியசாலையில் 65 பேரும், பாலமுனை வைத்தியசாலையில் 71 பேரும் மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் கொரோனா சிகிச்சை நிலையம் ஐந்திலும் 495 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பேலியகொடை மீன் சந்தையுடன் இரண்டாம் நிலையான சந்தேகத்துக்குரியவர்களுடன் நேரடி தொடர்புபட்டவர்கள் 340 பேருக்கு கிழக்கு மாகாணத்தில் பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவசிய தேவைகள் இன்றி மூதூர் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வெளியிடங்களைச் சேர்ந்த மக்களுக்கு பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்