நாடாளுமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும்!

 

 பால்மா விவகாரம்" சுகாதார அமைச்சரை ஏமாற்றிவிட்டார்கள் - புத்திக்க ~ Jaffna  Muslim

நாடாளுமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அதிக எண்ணிக்கையிலான ஆவணங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் பாரியளவில் அதற்கான செலவுகளை குறைக்க முடியும்.

இந்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது எனவும், இந்தப் பிரேரணை தாம் அமோதிப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் மாற்றத்தைச் செய்து ஆவணங்களை டிஜிட்டல் மயப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்