தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன: லசந்த அழகியவன்ன

 

 அரச கணக்காய்வுக் குழு தலைவராக லசந்த அழகியவன்ன நியமனம் - Newsfirstதரம் குறைந்த பொருட்களே நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக ராஜாங்க அமைச்சர் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் மிக சொற்ப அளவிலான பொருட்கள் மட்டுமே தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் சுமார் 7600 வகையான பொருட்கள் வழமையாக இறக்குமதி செய்யப்படுவதாகவும் இதில் 1100 வகையான பொருட்கள் மட்டுமே தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தரம் குறைந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதனால் நுகர்வோர் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விடவும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரம் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூகத்தின் தேவையை கருத்திற் கொண்டே ஜனாதிபதி இவ்வாறான ஓர் ராஜாங்க அமைச்சினை உருவாக்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

நியாயமான விலையில் தரமான பொருட்களை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுப்பதற்கு ராஜாங்க அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்