கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்கள் சாய்ந்தமருது விஜயம்!

 


 பாறுக் ஷிஹான்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி பொறுப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களின் அழைப்பினை ஏற்று அம்பாறை மாவட்டம், கல்முனை தொகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் இன்று (15)மாலை  சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன் அபிவிருத்தி குழு ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் வழங்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஆளுனர் அவர்கள் விரைவில் இதற்கான பல்வேறு தீர்வுகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்