ஆட்டோ விபத்தில் ஏழு பேர் காயம்!

 

 (க.கிஷாந்தன்)

 

நுவரெலியா - அட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் ஆட்டோவொன்று இன்று (13.09.2020) பிற்பகல் 3.30 மணியளவில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்  பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

 

ஆட்டோவில் பயணித்த மூவரும், பேருந்துக்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த நால்வருமே காயமடைந்த நிலையில் சிகிச்கைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அக்கரபத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஆட்டோவொன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பஸ் தரிப்பிடத்தில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனது.

 

அவ்வேளையில் பஸ் தரிப்பிடத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரும், பெண்ணொருவரும் பஸ்சுக்காக காத்திருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் காயமடைந்துள்ளனர்.

 

இவ்விபத்தால் பஸ்தரிப்பிடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது, திம்புள்ள - பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்