இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை

 


திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமாகியது.

 மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில்  மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து விசேட பூசையின் பின்னர் ஆன்மீக பாதை யாத்திரை ஆரம்பமானது

 பாதயாத்திரையில்   நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோணா அச்சம் காரணமாக சுகாதாரத் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அமைவாக   குறைந்தளவு பக்தர்கள் நந்திக் கொடியை ஏந்தி அரோகரா கோசத்துடன் தங்களது ஆன்மீக பாதை யாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.

 வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ உற்சவத்தினை முன்னிட்டு  செவ்வாய்க்கிழமை காலை மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமான யாத்திரை எதிர்வரும் திங்கட்கிழமை மாலை  வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் சென்றடையும்.

 செவ்வாய்க்கிழமை காலை ஆரம்பமானது பாதையாத்திரையானது  ஏழு நாாட்கள்  இடம்பெறவுள்ள நிலையில் பிரதான வீதியில் உள்ள ஆலயங்கள் தரிசனம் செய்து  தங்களது பாதையாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை வருடா வருடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ந.குகதர்சன்