மருதம் கலைக்கூடல் மன்ற செயற்குழுவின் விசேட அமர்வு!

 நூருள் ஹுதா உமர்.


சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்ற செயற்குழுவின் விசேட அமர்வொன்று இன்று மாலை மன்றத்தின் காரியாலயத்தில் மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்றது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளின் விடயதானங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன் மன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

சிறந்த முறையில் இயங்காத நிர்வாகிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்ற செயற்குழுவின்  கோரிக்கைகளை முன்வைத்து புதிய பிரதித்தலைவாராக ஓய்வு பெற்ற அரச சேவை உத்தியோகத்தரும் கலைஞருமான என்.எம்.அலிகானும், செயலாளராக முன்னாள் பிரதி செயலாளர் அறிவிப்பாளர் ஐ. ஜாபீரும், பிரதி செயலாளராக கலைஞர் எஸ்.எல். றியாஸும் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்