சர்வாதிகார ஆட்சியை கொண்டு வரும் திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ள அரசாங்கம்!

 

 வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று ஜெனிவா பயணம் | Virakesari.lk

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பாதிப்பான விடயங்களை நீக்குவதாக மக்களுக்கு கூறிய தற்போதை அரசாங்கம், அதற்கு பதிலாக மக்களின் சுதந்திரம், மனித உரிமை மற்றும் சட்ட உரிமையை நீக்கி விட்டு, ஒரு நபரை கேந்திரமாக கொண்ட தன்னிச்சையான அதிகாரத்திற்கு அடிக்கல் நாட்டும் புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியலமைப்புச் சட்டம் ஏகாதிபத்தியவாத சட்டம் எனக் கூறி எதிர்த்த மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோரே ஒரு குடும்பத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக மீண்டும் ஒரு முறை சர்வாதிகாரி ஆட்சியை கொண்டு வரும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ளதாக மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

நாட்டை அபிவிருத்தி செய்து மக்களுக்கு பிரதிபலன்களை பெற்றுக்கொடுப்பது இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர காரணமல்ல. சர்வாதிகாரியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தெரிவாகும் நாட்டின் இரட்டை மக்கள் ஆணையில் தெரிவாகும் நாடாளுமன்றம் மாத்திரமல்ல, நீதித்துறையும் தரம் தாழ்த்தப்படும் என்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.

நீதி சேவைகள் ஆணைக்குழு உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது மாத்திரமல்ல, நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதி தன்வசப்படுத்தியுள்ளார்.

தம்மை நீக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டுள்ளதால், நீதி சேவைகள் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற செயலாளர் உட்பட சுயாதீன ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியை திருப்திப்படுத்த நேரிடும்.

இப்படியான நிறுவனங்களில் மக்கள் எதிர்பார்க்கும் சுயாதீனம், நீதி, நியாயம் எதுவும் எந்த வகையிலும் மக்களுக்கு கிடைக்க போவதில்லை.

இவ்வாறு அனைத்து நிர்வாக அதிகாரங்களை ஒரு நபரின் ஊடாக குடும்பத்தை மையப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இருந்து ஏற்படும் எதிர்ப்பை சமாளிக்கக் கூடிய வகையில் அமைச்சரவை எண்ணிக்கை தொடர்பாக இதுவரை இருந்து வந்த வரையறை நீக்கப்பட்டு, நினைத்தாற்போல் அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தையும் ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் மங்கள சமரவீர தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்