இரட்டை குடியுரிமை தொடர்பில் சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியம் ஜனாதிபதிக்கு கடிதம்

 DO NOT ALLOW UN PANEL TO COME HERE, SAYS DR. GUNADASA AMARASEKERA ::.  Latest Sri Lanka News

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தும் வரை வேறு எந்த தேர்தல்களையும் நடத்தக் கூடாது என சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் 20ஆவது திருத்தச் சட்டத்தில் இரட்டை குடியுரிமை பெற்ற நபர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக விதிக்கப்பட்டுள்ள தடையை உள்ளடக்க வேண்டும்.

அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர், இராணுவ தளபதிகள், நீதிபதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆகிய பதவிகளுக்கு இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நியமிக்கப்படக் கூடாது என்ற தடையும் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் குணதாச அமரசேகர ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.