ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும் எனக் கூறப்படுவது மாயை: ஜீ.எல்.பீரிஸ்

 

 நாளை புதன்கிழமை சிறிதளவு தவறினாலும் தூக்குமேடை உறுதி : பேராசிரியர் ஜீ.எல்.  பீரிஸ் - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஊடாக ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும் என சில தரப்பினர் கூறுவது மாயை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மூன்று தினங்களாக நாடாளுமன்ற பேரவை மிகப் பெரியவில் விமர்சனத்திற்கு உள்ளானது. அது ஆணைக்குழுக்களுடன் சம்பந்தப்பட்டது.

20ஆவது திருத்தச் சட்டத்தால் ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படும் என சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் மாயை. ஆணைக்குழுக்கள் இருக்கும்.

20வது திருத்தச் சட்டத்தின் கீழ் 7 ஆணைக்குழுக்கள் இருக்கும்.

தேர்தல், அரச சேவைகள், பொலிஸ், மனித உரிமை, இலஞ்சம் மற்றும் ஊழல், நிதி, தேர்தல் தொகுதி தொடர்பான எல்லை நிர்ணய ஆணைக்குழு என இந்த ஆணைக்குழுக்கள் தொடர்ந்தும் இருக்கும். அவை ஒழிக்கப்படவில்லை.

எனினும் ஆணைக்குழுக்களின் பொறுப்புகளில் மாற்றங்களை செய்துள்ளோம். ஆணைக்குழுக்களை முன்னர் அரசியலமைப்பு பேரவை நியமித்தது. அதற்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை கொண்டு வரப்படுகிறது.

நாடாளுமன்ற பேரவையின் யோசனைகள் மற்றும் கருத்துக்களை கேட்டறியும் கட்டாய கடமையும் பொறுப்பும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதமளவில் 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

எந்த சந்தேகமும் இன்றி இதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

குறுகிய காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டிய அதிகாரங்களை வழங்குவதே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் நோக்கம் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்