வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினை வலியுறுத்தி சமூக விழிப்பூட்டல் பேரணி

 


பாறுக் ஷிஹான்


நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்காக முன்னெடுக்கப்படும் செயல்திட்டங்களில் ஒன்றான வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினை பாதுகாத்து அக்கல்வி தொடர்பாக சமூக விழிப்பூட்டல் பேரணி நவஜீவன நிறுவனத்தினால் சி.பி.எம் நிறுவனத்தின் அணுசரனையுடன் இன்று(24)  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் முன்னால் நடைபெற்றது.

 நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நவஜீவன நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ரி.டி.பத்மகைலநாதன் நாவிதன்வெளி நாவிதன்வெளி பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகஸ்வரன்  கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் மனோஜ் இந்திரஜித்   சமூக சேவை உத்தியோகத்தர் பி.குணச்செல்வி மற்றும் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் வலுவிழப்புடன் கூடிய சிறுவர்களுக்கான கல்வி உரிமையினை வலியுஞத்தி துண்டுப்பிரசுரங்கள் வீதிகளில் விநியோகிக்கப்பட்டதுடன் வீதியால் சென்ற வாகனங்களில் விழிப்பூட்டல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட பின்னர் ஆலோசனைக்கூட்டம் கருத்தரங்குடன் இனிதே நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்