அம்பாறையில் இரு வேறு இடங்களில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு 


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு  சலாம் பள்ளி  பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக  விசேட அதிரடிப்படையினருக்கு இன்று(22) முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய உரைப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதே வேளை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறீன் பீல்ட் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவர் கைதானார்.

கைதான சந்தேக நபரை கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்