வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆன்மீக பாதயாத்திரை நிறைவடைந்தது

 ந.குகதர்சன் 
 

 

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆரம்பமான ஆன்மீக பாதயாத்திரை இன்று திங்கட்கிழமை மாலை நிறைவடைந்தது.

 மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில்  மண்டூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆன்மீக பாதை யாத்திரை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது

 கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான யாத்திரை ஏழு நாட்கள்  இடம்பெற்ற நிலையில் பிரதான வீதியில் உள்ள ஆலயங்கள் தரிசனம் செய்து  இறுதி நாள் திங்கட்கிழமை பாதையாத்திரை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலத்தினை சென்றடைந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நந்திக் கொடியை ஏந்தி அரோகரா கோசத்துடன் தங்களது ஆன்மீக பாதை யாத்திரையில் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் சித்திரவேலாயுத சுவாமி ஆலய மகோற்சவத்தின் தீர்த்த உற்சவம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் ஆன்மீக பாதயாத்திரை வருடா வருடம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்