குண்டுச் சத்தங்களால் மக்கள் அச்சம்: யாழில் சம்பவம்!

 

முக்கிய படை முகாமில் கேட்ட பயங்கர வெடிச்சத்தம் - Dina Seithigal | DailyHunt


 யாழ்ப்பாண நகரத்தை அண்டிய பகுதிகளில் நேற்று திடீரென கேட்ட தொடர் குண்டு வெடிப்புச் சத்தங்களால் மக்கள் மத்தியில் இலேசான பதற்றம் தென்பட்டது.

நீண்டகாலத்தின் பின்னர் யாழ்ப்பாண நகரம், வலிகாமம் தென்மேற்கு, தீவகப் பகுதிகளில் இந்த தொடர் குண்டு சத்தங்களை கேட்க முடிந்தது. பெரும் சத்தத்தில் குண்டுகள் – குறிப்பிட்ட நேரத்திற்கு வெடித்தது.

இதனால் சில பகுதிகளில் வீடுகளில் அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண பகுதிகளில் அவ்வப்போது கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் இராணுவத்தின் களஞ்சியசாலைகளில் இருந்த அகற்றப்பட வேண்டிய வெடி பொருட்களே வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் யாழ்.மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்