சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்த உடற்பயிற்சி நிலையம் கள்ளப்பாட்டில் திறந்துவைப்பு 


விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு - கள்ளப்பாட்டில், மறைந்த உடற்பயிற்சி ஆசான், சாண்டோ துரைரட்ணம் ஞாபகார்த்தமாக, சிவலிங்கம் பிறேம்சிங் என்பவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி நிலையம் 19.09.2020 நேற்றையநாள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த உடற்பயிற்சி நிலையத்தினை, உடற்பயிற்சி ஆசிரியரான
சாண்டோ செல்வக்கதிரமலை செல்வராசா திறந்துவைத்தார்.

மேலும் விருந்தினர் வரவேற்புடன் தொடங்கிய இந் நிகழ்வில், தொடர்ந்து மங்கலவிளக்கேற்றல் இடம்பெற்றதையடுத்து குறித்த உடற்பயிற்சி நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

அதனையடுத்து நிகழ்வில் விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றதுடன், குறித்த உடற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்த சிவலிங்கம் பிரேம்சிங் என்பவர், உடற்பயிற்சி ஆசான் சாண்டோ செல்வக்கதிரமலை செல்வராசாவினால் மதிப்பளிக்கப்பட்டார்.

மேலும் இந் நிகழ்வில் விருந்தினர்களாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், உடற்பயிற்சி ஆசான்செல்வக்கதிரமலை செல்வராசா மற்றும், தமிழர்களின் பாரம்பரிய சிலம்புக் கலைப் பயிற்றுனர்களான
சின்னத்துரை குமாரசுவாமி, வேலுப்பிள்ளை பரமேந்திரம் ஆகியோருடன், உடற்பயிற்சி ஆசிரியர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்