நாட்டில் கொரோனா மீண்டும் பரவலாம் - இராணுவத் தளபதி எச்சரிக்கை!




(க.கிஷாந்தன்)

 

இலங்கையில் கொரோனா தொற்று முற்றாக நீக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதியும்கோவிட்-19 தொற்றை ஒழிக்கும் படையணியின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாமக்களின் கவனயீனத்தால் மீண்டும் பரவலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இலங்கைக்கு வந்த இந்தியக் கப்பலில் இருந்த கோவிட்-19 தொற்றாளர்கள் காரணமாக இதுவரை 34 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார்

 

இராணுவத்தின் 71ஆவது நிறைவாண்டு எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  10ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது

 

இந்த வழிபாட்டு நிகழ்வுகளின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இராணுவத் தளபதியிடம் இலங்கையில் தற்போதைய கொரோனா வைரஸ் நிலவரம் பற்றி ஊடகவியலாளர்கள் வினவினர்.

 

இதற்கு பதிலளித்த இராணுவத் தளபதி

 

கோவிட்-19 பார்க்கின்ற அளவில் இலங்கையில் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்னும் நாட்டில் இருக்கிறது. மார்ச் 11ஆம் திகதி முதல் 50 நாட்களிற்குள் இலங்கையில் சமூகத்திலிருந்து இந்தத் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு எமக்கு முடிந்தது. ஆனாலும் வெளிநாடுகளில் இருந்து தொழில்நிமித்தம் சென்று கோவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் நாடு திரும்புகின்றவர்களும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதால் உள்நாட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

 

ஆகவே இந்தத் தொற்று இருக்கின்ற நிலையில் படையினர் முற்றுமுழுதாக வேறு பக்கம் பணிகளை செய்வதற்கு சந்தர்ப்பம் குறைவாக உள்ளதுஇருந்த போதிலும் எமது படை பயிற்சிகளை நாங்கள் நிறுத்தவில்லைஎந்த சந்தர்ப்பத்திலும் படையினர் தயாராகவே இருக்க வேண்டும் என்கிற நிலையில்கோவிட்-19 தொற்று நெருக்கடிக்கு மத்தியில் இப்பயிற்சிகள் பாதிக்கப்பட்டிருந்தனஎமது சேவையான நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் மக்களுக்கான சேவைகளை செய்வதற்கும் இராணுவம் தயாராக உள்ளதுஅதேபோலமட்டக்களப்பு கரையோரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் நியூ டயமன் கப்பல் நிறுவனம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதுஅந்தக் கப்பல் நிறுவனத்திடம் இருந்து இலங்கை அரசாங்கத்திற்கு ஒருதொகை பணம் வழங்கப்படவுள்ளது.

 

இரண்டாவது கப்பலான திருகோணமலையில் நங்கூரமிடப்பட்டுள்ள நிலையில் அங்கு 17 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்அந்த இந்தியக் கப்பல் திருகோணமலைக்கு செல்லும்முன் கொழும்பு துறைமுகத்திலிருந்த காரணத்தினால் கப்பலிற்குள் சென்றுவந்த 6 ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் சமூகத்தில் பரவாமலிருப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதுசுகாதார நெறிமுறைகளை மக்கள் மறந்தால் மீண்டும் தொற்று நாட்டில் பரவலாம்” என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்