சிங்கள தேசிய சக்திகள் வடக்கு கிழக்கில் மையம்கொள்வதை நிறுத்த நாம் பலமடைய வேண்டும்!

 சிங்களத் தேசிய சக்திகள் அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்ற கட்சிகள் வடக்கு கிழக்கை மையப்படுத்தி உருவெடுக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என தமிழ் தேசிய இளைஞர் பேரவையை தலைமைதாங்கும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிங்கள தேசிய சக்திகள் மையம்கொள்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் கலந்துரையாடல் யாழ்.கொடிகாமம் நட்சத்திர மஹால் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் பின்னல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மணிவண்ணன், “தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளையோர் அமைப்புபினருக்கான கலந்துரையாடலை இன்று சாவகச்சோரி கொடிகாமம் பகுதியில் நடத்தினோம்.

அதாவது, தமிழ் மக்களின் அரசியல் பல்வேறுபட்ட கட்சிகள் ஊடாக சிதைக்கப்பட்டுள்ளது. அதோடு 2020 ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியவாதம் சிதைக்கப்பட்டுள்ளது. இது கண்ணூடாகத் தெரிகின்ற விடயம்.

சிங்களத் தேசிய சக்திகள் அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்ற கட்சிகள் வடக்கு கிழக்கை மையப்படுத்தி உருவெடுக்கின்ற, ஆலமரமாக விஸ்தரிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, அதனைச் சீர்செய்து ஒரு பலம் வாய்ந்த கட்சியாக மாற்றுவதற்கே இந்த ஒன்றுகூடலை கூட்டியிருந்தோம்” என தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்