ஐ.தே.கட்சியும் ஐ.மக்கள் சக்தியும் இணைய வேண்டிய காலம் வந்துள்ளது: அத்தநாயக்க

 

 போலி ஆவணத் தயாரிப்பு தொடர்பான வழக்கிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விடுவிப்பு -  Newsfirst


ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் செயற்பட வைக்க வேண்டுமாயின் அதனை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சியினை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் இரண்டு கட்சிகளையும் இணைந்து பணியாற்ற வேண்டிய காலம் வந்துள்ளதாக அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்த வேண்டுமாயின் அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு அணிக்குள் கொண்டு வருவது ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்