நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்ட மரவள்ளி அறுவடை விழா
 பாறுக் ஷிஹான்


தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்ட மரவள்ளி அறுவடை விழா செப்டம்பர் 16 ,17 அன்று  இடம்பெற்றது.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்திற்கு அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பை முன்மாதிரியாக எடுத்துக்காட்டுமுகமாகவே நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் மரவள்ளிச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ஆர்.லதாகரன், கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் உள்ளிட்ட  அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்