5 மாதத்திற்கு பிறகு கோயில்கள் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி

 

 

 


 

க.கிஷாந்தன்

 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்திருந்தது. தற்பொழுது ஒவ்வொரு தளர்வுகளாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு மக்கள் கட்டுப்பாடுடன் கூடிய சுவாமி தரிசனம் செய்யலாம் என்று மாநில அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களும் உள்ளூர் பக்தர்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பாக கோயில் முன்பாக கைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்து பக்தர்களை உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

 

ஐந்து மாத காலத்திற்கு பிறகு சுவாமி தரிசனம் செய்தது. மன மகிழ்ச்சி தருவதாக அவர்கள் கூறினர். மேலும் விரைவில் காரோனாவில் இருந்து மீண்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தனர்.

 

மேலும்,  கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேங்காய் பழம் புஷ்பங்கள் எதுவும் கொண்டு வர அனுமதி இல்லை, மீறி கொண்டு வருபவர்கள் அந்த பொருட்களை அர்ச்சகர்கர்கள் கையில் குடுக்காமல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து விட வேண்டும், அர்ச்சனை செய்வது, திருக்கோயில் வலம் வருவது, அபிஷேகம் தரிசனம் செய்வது, அர்ச்சகர்கர்கள் பக்தர்களுக்கு வீபூதி குங்கும பிரசாதங்களை கையில் குடுப்பது போன்றவைகளை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

கால பூஜை காலங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சகர்கர்கள் வீபூதி குங்கும பிரசாதங்களை கையில் குடுக்க கூடாது. பக்தர்களிடம் இருந்து எதுவும் கையில் வாங்க கூடாது, கோவிலுக்குள் பக்தர்கள் இடைவெளி விட்டு மூலவரை தரிசிக்க மட்டுமே அனுமதி. பிரதக்ஷிணம் செய்ய தடை,  திருக்கோயிலுக்குள் தீபம் ஏற்றி வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் பார்சல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்