மக்கள் ஆணை வழங்கினார்கள் என்பதற்காக 20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வர இடமளிக்க முடியாது

 

 தகுதியில்லாத தூதுவர்களை நீக்க வேண்டும் - பிமல் ரத்நாயக்க | Virakesari.lk

அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன பெற்றுக்கொண்ட அதிகாரங்களை விட மிகப் பெரிய அதிகாரங்களை ராஜபக்ச குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என்பதற்காக இந்த நிலைமையை ஏற்படுத்த இடமளிக்க முடியாது.

நீதித்துறை, கணக்காய்வு மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகிய மூன்றையும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் முயற்சித்துள்ளனர்.

இதன் மூலம் நாட்டில் ஊழலுக்கு மணி மகுடம் சூடப்படும் எனவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்