20வது திருத்தச் சட்டத்தில் நாட்டுக்கு தேவையற்ற சில விடயங்கள் இருக்கின்றன!

 அரச மொழி சிங்களம் மாத்திரமே: கெவிந்து குமாரதுங்க - Tamilwin

அரசாங்கம் வெளியிட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவில் நாட்டுக்கு தேவையற்ற விடயங்கள் சில அடங்கி இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவது பொருத்தமற்றது.

அத்துடன் இதனை போன்ற ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் குறைப்பாடுகளுடன் கூடிய பல விடயங்கள் இந்த திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்றன.

பல்வேறு சட்டமூலங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் கேள்வி எழுப்ப இருந்த சந்தர்ப்பம் இந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இரத்துச் செய்யும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பும் விடயத்தை மாற்ற வேண்டுமாயின் அது குறித்து ஆழமாக ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியம் எனவும் கெவிந்து குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.