இலங்கை சமாதான நீதவான்களின் பேரவையின் மன்னார் மாவட்டத்திற்கான கிளை ஆரம்பிப்பு

 இலங்கை சமாதான நீதவான்களின் பேரவையின் அதியுதர் பீடத்தின் மன்னார் மாவட்டத்திற்கான ஆரம்பிப்பு  நிகழ்வானது இன்று மாலை ( 2020-08-23) 4.00 மணிக்கு தலைமன்னார் வீதயிலுள்ள ஆங்கிலவளநிலையத்தில் பேரவையின் பிரதி ஆளுனர் திரு. சி.சிறிஸ்கந்தராஜா தலையில் ஆரப்பமானதுடன் பேரவையின் மன்னார் மாவட்டத்திற்காக அதியுயர் பீடத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றது 

 

இதில் பணிப்பாளராக தேச சக்தி திரு. S.A.பெனாண்டோ ( நிர்வாக கிராம உத்தியோகத்தர்) அவர்களும்  பிரதி பணிப்பாளராக தேச சக்தி திரு.P.ஞானராஜ்(பிரதி கல்விப்பணிப்பாளர் மன்னார் வலையம்) , கீர்தி ஶ்ரீ திரு.M.கனிகபீர்(ஓய்வு நிலை அதிபர் ) அவர்களும் செயலாளராக தேச சக்தி திரு.A.டியூக் குரூஸ் ( தேசிய இளைஞர் சேவை உத்தியோகத்தர்),  உப செயலாளராக திருமதி.A.அஜந்தா ( சமூக சேவை உத்தியோகத்தர்) அவர்களும் பொருளாளராக திரு.I.C.A.யோன்பொஸ்கோ ( ஓய்வுநிலை உத்தியோகத்தர்)  மற்றும் சமாதான நீதவான்களின் இணைப்பாளராக கலாநிதி திரு.K.M.நஜீம் ( நீதிமன்ற நன்னடத்தை உத்தியோகத்தர்) உள்பட எட்டு நிர்வாக உறுப்புனர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன் வரும் காலத்தில் சமாதான நீதவான்களின் தொழில் கெளரவத்தை பாதுகாத்து செயல்படுவதாக தீர்மாணம் எடுக்கப்பட்டதுடன் இன்றைய கூட்டத்தில் 40 இற்கு மேற்பட்ட அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் உயர் பதவிகள் வகிப்போர் உள்பட பலர் கலந்து சிறப்பித்தார்கள்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்