கலையரசுனுக்கு தேசியப்பட்டியல் வழங்க மாவை எதிர்ப்பு மீண்டும் இழுபறி!

 

கிழக்கு மாகாண சபை  முன்னாள் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் இன்று காலை வெளிவந்த நிலையில் கட்சிக்குள் மீளவும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக புதிய குரல் யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த தேசியப்பட்டியல் மாவை சேனாதிராஜா அல்லது கோடீஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.