முல்லை வைத்தியசாலையின் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

 

 

 விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில், காணப்படும் வைத்தியர் அளணிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி 17.08 இன்றையநாள் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் மற்றும், அபிவிருத்திச்சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் 60பேருக்குரிய வைத்தியர் ஆளணிகள் தேவைப்படுகின்றநிலையில், தற்போது வெறுமனே 27வைத்தியர்களே பணியாற்றுவதாகவும் இதனால் நோயாளர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முங்கொடுப்பதாகவும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் தெரிவிக்கப்பட்டது.

எனவே குறித்த வைத்தியர் ஆளணி வெற்றிடங்களை உரியவர்கள் பூத்திசெய்து தரவேண்டும் எனவும் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட செயலரின் பிரதிநிதியாக ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளரிடம் சுகாதார அமைச்சுக்கான மற்றும் மாவட்ட செயலருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டதுடன், போராட்டத்தில் கலந்திருந்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பனர்களான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

அதேவேளை குறித்த வைத்தியர் வெற்றிடம் நிரப்பப்படும் வரையில், பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தொடர்ச்சியாக சுழற்சிமுறையில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலை நலன்புரி, மற்றும் அபிவிருத்தச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், க.சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் க.தவராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான, சி.லோகேஸ்வரன், த.அமலன், தி.இரவீந்திரன், க.விஜிந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்