தமிழர்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் கவனயீர்ப்பு

 

 

விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு - கொக்கிளாய்பகுதியில், கனியவளத் திணைக்களம், கடற்படையினர் மற்றும், தென்னிலங்கையிலிருந்து தொழிலுக்காக வந்த சிங்களமக்கள் எனப் பல தரப்பினராலும், அபகரிக்கப்பட்டுள்ள தமது பூர்வீக விவசாய மற்றும் குடியிருப்புக் காணிகளை விடுவித்துத் தருமாறு கோரி கொக்கிளாய்ப் பகுதி தமிழ் மக்கள் 14.08.2020 இன்று கவனயீர்ப்புச் செயற்பாடொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

குறிப்பாக முல்லைத்தீவு - நீதிமன்றத்திற்கு அருகாமையிலிருந்து பதாதைளை ஏந்தியவாறு அமைதியான முறையில், மக்கள் ஊர்வலமாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம்வரை சென்றனர்.

தொடர்ந்து பதாதைகளை ஏந்தியவாறு "எமது நிலம் எமக்கு வேண்டும்" எனக் கோசம் எழுப்பி கவனயீரப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அதனையடுத்து தமது காணிவிடுவிப்புத் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கான மகஜர்கள் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசங்க அதிபர் க.கனகேஸ்வரனிடம் பாதிக்கப்பட்ட மக்கள் கையளித்தனர்.

மேலும் குறித்த கவனயீர்ப்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சின்னராசா லோகேஸ்வரன், கிருஷ்ணபிள்ளை சிவலிங்கம் ஆகியோர் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்