வட்டமடு விவசாய காணி, அஸ்ரப் நகர் குடியிருப்பு காணிகளை அரசு உடன் விடுவிக்க வேண்டும்

 

 


அம்பாறை முஸ்லிம்களின் நீண்டகால நிலப்பிரச்சினையாக இருந்து வரும் வட்டமடு விவசாய காணி, அஸ்ரப் நகர் குடியிருப்பு காணிகளை அரசு உடன் விடுவிக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை மற்றும் சமாதான ஆணையகத்தின்  சிறப்பு விவகார பணிப்பாளர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதிய குரல் ஊடகத்திற்கு அனுப்பிவைத்துள்ள செய்தியில்.
முஸ்லிம்களுக்கான உரிமைகளை யாராலம் மீட்டுக்கொடுக்க முடியாது இது உறுதியான விடயம். யார் அதிகாரத்திற்கு வந்தாலும் இது நடைபெறாதுஇ மாறாக தமிழ் மக்களுக்கான உரிமைகளை தமிழ் அரசியல் தலைவர்கள் பெற்றுக்கொடுக்கிறார்கள். இதற்கான காரணம் அவர்களின் மூலமான சர்வதேச தலையீடு மற்றும் உறுதியான கொள்கை. அண்மையில் அம்பாறை மாவட்டம் ஒலுவில் பிரதேச அஸ்ரப் காணிகளில் இருந்து இராணுவம் தாமாக வெளியேறி அக்காணிகளை கிழக்கு ஆளுநரிடம் ஒப்படைத்தது. ஆனால் இன்று அவைகள் மக்களுக்கு கிடைக்கவில்லைஇ ஏன்  இவை இன்றும் கிடைக்கப்பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

இந்த மக்கள் பல பேராட்டங்களை செய்தனர். ஊடகங்களிலும் இவர்களின் குரல்கள் ஒலித்தன ஆனாலும் தீர்வில்லை, இந்த பகுதியினை வன இலாகா கேட்கின்றனர். இராணுவம் இருந்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இவைகளின் அடிஆழம் என்பது பாமரனுக்கும் புரியும். இப்படியிருக்கையில் வடக்கில் காணிகள் மீள கையளிக்கப்பட்டது. ஆனால் கிழக்கில் அப்படி இடம்பெறவில்லை. வட்டமடு உள்ளிட்ட பல விவசாய காணிகள் இன்னும் வனபரிபாலன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறதுஇ அங்கு விவசாயம் நடைபெறாத காரணத்தினால் பலர் தொழில்களை இழந்து கடந்த 30 வருடங்களாக போராடி வருகிறார்கள். முஸ்லிம்களின் காணி உரிமை விடயத்தில் அரசு உடன் கவனம் எடுத்து அதனை நிவர்த்தி செய்யவேண்டும் இந்த விடயம் தொடர்பில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, தொடர்ந்தும் இலங்கையில் முஸ்லிம் அனுபவித்து வரும் இன்னல்கள் இழந்த உரிமைகள் தொடர்பிலும் பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளன, இவை குறித்த சிறப்பு அறிக்கை அடுத்த அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்