செஞ்சோலை சிறார்களின் பதின் நான்காம் ஆண்டு நினைவேந்தல்

 

 

விஜயரத்தினம் சரவணன்


இலங்கை வான்படையால் கொல்லப்பட்ட செஞ்சோலை சிறார்களின் பதின் நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது இன்றைய நாள் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்றது.

அந்தவகையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தனது மக்கள் தொடர்பகத்தில் இந்நினைவேந்தலை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் மற்றும் சமூக ஆர்வலர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 


 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்