தென்கிழக்கு பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 

 


நூருள் ஹுதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலைக் கலாசார பீட தலைமைப் பேராசிரியர்களாக வரலாற்றில் முதன்முறையாக  தெரிவுசெய்யப்பட்ட பேராசிரியர் எம்.ஏ.எம்.றமீஸ் மற்றும் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (19) காலை கலை கலாசார பீட அரங்கில் நடைபெற்றது. 

கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பதிவாளர், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் துறைத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு தலைமைப் பேராசிரியார்களாக தெரிவுசெய்யப்பட்ட பேராசிரியர்களை பொன்னாடை போற்றி நினைவு சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்