திருகோணமலையில் புத்தர் சிலை உடைப்பு - சிங்கள பௌத்தர்களே உடைத்தாக தகவல்!

 

 

திருகோணமலை- சேருநுவர பகுதியில் மதுபோதையில் புத்தர் சிலைகளை உடைத்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (09) மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, சேறுநுவர, தெஹிவத்த பகுதியைச் சேர்ந்த வீரக்கோன் முதியன்சலாகே ரஞ்சித் அபேரத்ன (45வயது) தனிபல முதியன்சலாகே அரேஸ் ஜெயசிங்க (30வயது) வராட்ட கால்ல, நெகனஹிர, ஹஸலக, மற்றும் சமீர சம்பத் பண்டார சகல சூரிய (26வயது) வேவெல கெதர, அம்பாலே, மெத நுவர போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது மதுபோதையில் மூவரும் நேற்றிரவு சேருநுவர சந்திக்கு அருகில் உள்ள புத்தர் சிலைகளை உடைத்து சேதமாக்கிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களை கைது செய்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
 


 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்