விவசாய பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்து தீர்வு வழங்கல்

 

 எஸ்.எம்.எம்.முர்ஷித்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய (விரிவாக்கம்) திணைக்களத்தின் ஏற்பாட்டில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பீடை நோய்கள் பிரச்சனைகளை ஆராய்ச்சி செய்து தீர்வு வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆராய்ச்சி பணிப்பாளர் எஸ்.அரசசேகரி, மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கரடியானறு, கிளிநொச்சி, அரலகன்வில, பேராதெனிய, வத்தலகுட ஆகிய ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் எதிர்கொள்ளும் பீடை, நோய் பிரச்சனைகள் தொடர்பில் தீர்வுகள் வழங்கப்பட்டது.

இதில் விவசாயிகள் தங்களின் விவசாய தோட்டங்களில் காணப்படும் பீடை நோய்கள் உள்ள பயிர் மாதிரிகளுடன் வருகை தந்து ஆராய்ச்சி உத்தியோகத்தர்களிடம் காணப்பிக்கப்பட்டு அதனை முற்றாக கட்டுப்படுத்தும் வகையிலான விளங்கங்களை பெற்றுக் கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்