கஜேந்திரகுமார், கஜேந்திரன் முள்ளிவாய்காலில் உறுதி ஏற்பு

 

 

விஜயரத்தினம் சரவணன்


இணைந்த வடகிழக்கு, தமிழ்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அங்கீகரத்திற்காகவும் தமிழ் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட மக்களின் சர்வதேச விசாரணைக்காகவும், போரால் அழிந்த எமது தேசத்தைக் கட்டி எழுப்புவம் அற்பணிப்புடனும் நேர்மையுடனும் உழைப்போமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் உறுதி மொழி எடுத்துள்ளனர்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், 15.08 இன்றையநாள் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் நினைவிடத்தல் சுடரேற்றி, மலர்தூவி, உறுதிமொழிஎடுத்து சம்பிரதாயபூர்வமாக தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தனர். அப்போதே அவர்களால் இவ்வாறு உறுதி எடுக்கப்பட்டது.

மேலும் அவர்களுடைய உறுதியுரையில்,

உள்ளக வெளியக சவால்களைச் சந்தித்த பின்னும் தமிழ்த்தேசியப் போராட்டம் நீட்சி பெற்றுள்ளது.

கால நீட்சியில் படிமுறைரீதியாக மாற்றங்களைக் கண்ணடபோதும் இலக்கு மாறாமல் புதிய பரிமானத்தோடு எமது இலட்சியப் போராட்டம் தொடர்கின்றது. அதன் சாட்சியாக இங்கே அணி திரண்டு நாங்கள் நிற்கின்றோம்.

வரலாறு வழிகாட்ட, காலத்தின் கட்டளைக்கேற்ப வரலாற்றுப் பொறுப்பினை சுமந்துள்ள நாம், தேச நிர்மாணிப்பாளர்களாக, நிலைமாற்றமடைய கடந்த கால தியாகங்களை மனதில் இருத்தி உறுதி கொள்கின்றோம்.

ஆத்மார்த்த ரீதியாக எம்மை எமது போராட்டத்தோடு இணைத்து, எமது விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள தடைகளைக் கடந்து, இணைந்த வடக்கு, கிழக்குத் தாயகம், தமிழ்த்தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அங்கீகாரத்திற்காகவும், தமிழ் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்களின் சர்வதேச நீதிக்காகவும், போரால் அழிந்த எமது தேசத்தினைக் கட்டி எழுப்பவும் அற்பணிப்புடனும், நேர்மையுடனும் உழைப்போம் எனவும் றுதிகூறுகின்றோம். என உறுதி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிரு்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்