இரத்தப் பற்றாக்குறையினை பூர்த்தி செய்யும் வகையில் இரத்ததான முகாம்

 

 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்யும் வகையில் பல்வேறு இடங்களிலும் நலன் விரும்பிகளினாலும் பொது அமைப்புகளினாலும் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு ஹரித்தாஸ் எகட் அமைப்பின் சர்வமத இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.

பொதுநல விரும்பிகளின் ஒத்துழைப்புடனும் நடாத்தப்பட்ட இந்த இரத்ததான முகாமில் பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி டாக்டர் கே.விவேக் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்தானமுகாமில் மட்டக்களப்பு ஹரித்தாஸ் எகட் அமைப்பின் சர்வமத அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்