சிறப்புற நடைபெற்ற மடு மாதா அன்னையின் திருவிழா

 

 


மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா  (15) காலை சிறப்பாக இடம்பெற்றது.

கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் காலை 6.15 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைஇ காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரம சிங்கஇ அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்இ மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்இ அருட்தந்தையர்கள்இ அருட்சகோதரிகள்இ அரசியல் பிரதி நிதிகள்இ திணைக்கள தலைவர்களும் பக்தர்கள் கலந்துகொண்டு மடு அன்னையிடம் ஆசி பெற்றனர்

 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்