முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை; தமிழன் பத்திரிகைக்கு சவால் விடுக்கிறார்..!

 

முஸ்லீம் காங்கிரஸ் அரசுடன் இணய பேச்சுவார்த்தை இடம் பெறுவதாக
தமிழன் பத்திரிக்கயில் தலைப்பிட்டு வெளியாகிய செய்தியானது உன்மைக்கு புறம்பான போலியான செய்தியாகும் அப்படியென்றால் எங்கு சந்திர மண்டத்திலா..பேச்சு வார்த்தை நடந்தது என அப்பத்திரிக்கயின்
ஆசிரியரை கேட்க்க விரும்புகிறேன் என பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவும் பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான றுாமி ஜவ்பர் தெரிவித்துள்ளார்

 தேர்தலுக்கு முன்பே பல முறை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஷீல் ராஜபகஷ முஸ்லீம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் எந்த காரணம் கொண்டும் எமது அரசாங்கத்தில் சேத்துக்கொள்ள மாட்டோம் என மிகவும் பொறுப்புடன் கூறியுள்ளார் மேலும் அக்கட்சியின் தவிசாளரான ஜீ.எல்.பீரிஸ் அவர்களும் ஊடகங்களுக்கு இந்த செய்தியை உறிதிப்படித்தியுள்ளார் ஆகவே இந்த செய்தியில் எந்தவித உன்மையுமில்லை இன்று வரயும் அப்படி ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை அவ்வாறான தேவை ஒன்று அரசுக்கு ஏற்படவில்லை என்பதையும் பொறுப்புடன் அறியத்தருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.