லெபனான் வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர் ஒருவரும் காயம்!

 


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று (04) இடம்பெற்ற வெடிவிபத்தில் அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

குறித்த வெடிசம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை தூதரகம் அமைந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்த வெடிப்பு சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லெபனானில் 25,000 இலங்கையர்கள் தொழில்புரிவதுடன், அவர்களில் பெரும்பாலானோர் வீட்டு பணிபெண்களாவர்.

லெபனானில் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தேசிய சோக தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற வெடி சம்டபவத்தில் இதுவரை 78 பேர் காணமடைந்துள்ளதுடன் நான்காயிரத்துக்கும் அதிகமனோர் காயமடைந்துள்ளனர்.

துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் இரசாயன பொருட்களால் இந்த கோரவிபத்து இடம்பெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

6 வருடங்களாக 2 ஆயிரத்து 750 டொன் அமோனியம் நைட்ரேட் இரசாயன பொருட்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

அதேபோல் இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க தயார் என பிரதமர் கூறியுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்