தமிழ்தேச அங்கீகாரம், தமிழினப் படுகொலைக்கான பன்னாட்டு நீதி வேண்டும் - கஜேந்திரகுமார்

 

 

விஜயரத்தினம் சரவணன்

தமிழ்த்தேச அங்கீகரத்திற்காக நாங்கள் எடுக்கின்ற முற்சிகளுக்கும், அத்தோடு தமிழினப் படுகெலைக்கு சர்வதேச நீதியைக் கோருகின்ற வகையிலேயும் நாங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கும், அத்தோடு தமிழ்த்தேசம் திட்டமிடப்படட வகையிலே கடந்த 30வருடங்களுக்கு மேலாக அழிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையிலே, அந்த தேசத்தினைக்கட்டி எழுப்பி எமது சுய பொருளாதாரத்தினைக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுக்கின்றபோது அனைத்துத் தரப்புகளும் ஒத்துழைத்து எம்மோடு பயணிக்கவேண்டும். என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் 15.08இன்று சுடரேற்றி, பூத்தூவி உயிர் நீர்த்த அஞ்சலிகளை மேற்கொண்டு தனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முதல் தடவையாக்எமது மக்கள் ஒரு ஆணையினை வழங்கியருக்கக்கூடிய நிலையில், இந்த மக்களுடைய போராட்டத்தின் உயிர்த் தியாகங்களுக்கு மேலே நாங்கள் எமது மக்களுக்கு எந்தக் கொள்கையினை முன்வைத்து ஆணையைக் கேட்டோமோ அந்தக் கொள்கைக்கு நேர்மையாக நாங்கள் செயலாற்றுவோம் என்ற உறுதி மொழியினை நாங்கள் இங்கு முள்ளிவாய்க்காலில் எடுத்திருக்கின்றோம்.

முள்ளிவாய்க்காலில் எடுப்பதற்கான பிரதான நோக்கம், எங்களுடைய கொள்கைக்கு நேர்மையாக பயணிக்கின்ற, நேர்மைத் தன்மையினை வெளிப்படுத்துகின்ற வகையிலே நாங்கள் இந்த நிகழ்வினை ஒழுங்குசெய்திருக்கின்றோம்.

எம்மைப் பொறுத்தவரையிலே இந்தப் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிற்பாடு இருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள் மிகவும் சவாலுக்குள்ளே எம்முடைய இனத்தை தள்ளுகின்ற நிலைமையினைத்தான் உருவாக்கியிருக்கின்றது.

விசேசமாக எந்தத் தரப்பு எங்களைத் திட்டமிட்டு முள்ளிவாய்காலிலே அழிக்க முற்பட்டதோ, அந்தத் தரப்பு கடந்த பத்து வருடங்களாக காப்பாற்றப்பட்டு இன்ற ஆட்சிபீடத்திற்கு ஏறியிருக்கின்ற ஒரு நிலையினைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்ளைப் பொறுத்தவரையில், இனியும் நாங்கள்ஏமாந்து ஒரு பிழையான பாதையிலே தெரிந்தோ தெரியாமலோ செல்வது ஒரு தெரிவல்ல.

அந்தவகையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கடந்த பத்து வருடங்களாக ஒரு நேர்மையான அரசியலை எம்முடைய மக்களுக்குக் காட்டி வந்திருக்கின்றோம். அந்த நேர்மையான அரசியலுக்கு ஒரு ஆணை கிடைத்திருக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக முள்ளிவாய்க்கால் ஊடாக எந்தகொள்கையை, எந்த இலட்சியத்தினை, எந்த மக்களை அவர்கள் அழித்தொழித்து, எங்களுடைய இலட்சியப் பாதையை கைவிடச் செய்யும் நோக்கத்தோடு செயற்பட நினைத்தவர்களோ, எங்களுடைய இந்த தேர்தல் அங்கீகாரம் ஊடாக அவர்களுடைய அந்த முயற்சிகள் படுதோல்வி அடைந்திருக்கின்ற ஒரு செய்தியைத்தான் எம்முடைய தெரிவு காட்டுகின்றது.

அந்தவகையிலே எம்முடைய மக்கள் எம்மிடம்காட்டியிருக்கின்ற இந்த நம்பிக்கையை நாங்கள் முன் செல்வதற்கு, முக்கியமாக திழ்த்தேச அங்கீகரத்திற்காக நாங்கள் எடுக்கின்ற முற்சிகளுக்கும், அத்தோடு தமிழினப் படுகெலைக்கு சர்வதேச நீதியைக் கோருகின்ற வகையிலேயும் நாங்கள் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கும், அத்தோடு தமிழ்த்தேசம் திட்டமிடப்படட வகையிலே கடந்த 30வருடங்களுக்கு மேலாக அழிக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையிலே, அந்த தேசத்தினைக்கட்டி எழுப்பி எமது சுய பொருளாதாரத்தினைக்கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுக்கின்றபோது அனைத்துத் தரப்புகளும் ஒத்துழைத்து எம்மோடு பயணிக்கவேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் - என்றார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்