போதைப்பொருளுடன் அரசியல்வாதி ஒருவரது புதல்வன் உள்ளிட்ட ஏழு இளைஞர்கள் கைது - பதுளையில்

 

 

க.கிஷாந்தன்

பதுளை பகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரது புதல்வன் உள்ளிட்ட ஏழு இளைஞர்கள் போதை வஸ்து தொடர்பான குற்றச் சாட்டொன்றின் பேரில், பதுளை போதை வஸ்து குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால், இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை போதை வஸ்து குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிஸ் பிரிவினர் குறிப்பிட்ட ஏழு இளைஞர்களையும், போதை வஸ்து பக்கட்டுக்களுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணையின் போது, பதுளைப் பகுதியின் அரசியல்வாதியொருவரது புதல்வனும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாகவிருந்தே, கைது செய்யப்பட்டவர்கள் போதை வஸ்து விற்பனை தொடர்பான செயற்பாடுகளில் இறங்கியுள்ளரென்றும், ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்திருப்பதாக, குறிப்பிட்ட பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் அசங்க குணரட்ன தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்