தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியாக கலையரசன் தெரிவு

 

பாறுக் ஷிஹான்

கிழக்கு மாகாண சபை  முன்னாள் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

 இதுதொடர்பில் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் , தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கவுள்ளார் . தமிழ் அரசுக் கட்சிக்கு இம்முறை ஒரே ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்தது . அதற்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த இரண்டு நாள்கள் பேச்சுக்கள் இடம்பெற்றன .

இந்த நிலையில் அம்பாறை மாவட்டம் இம்முறை தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்துள்ள நிலையில் அந்த மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்


இதே வேளை தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய தவராசா  கலையரசனுக்கு அம்பாரை மாவட்டத்தில் அமோக வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.நாவிதன்வெளி பகுதியில் தவராசா கலையரசனின் ஆதரவாளர்களினால் பட்டாசு கொளுத்தப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும் 9 ஆவது  பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய  முன்னாள்  கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசனுக்கு அம்பாரைமாவட்டத்தில் பல இடங்களில் அமோ வரவேற்பு   அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ன.