எனது இறுதி ஊடக சந்திப்பு! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்

 


இதுவே தான் கலந்துகொள்ளும் இறுதி ஊடக சந்திப்பு என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிருடன் இருந்தால் அடுத்து இடம்பெறும் தேர்தலில் வாக்களிப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து இன்று இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இது நான் பணியாற்றும் இறுதி தேர்தல், உயிருடன் இருந்தால் அடுத்த தேர்தலில் வாக்களிப்பேன். 37 ஆண்டுகள் நான் இங்கு பணியாற்றியுள்ளேன்.

1983ம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி நான் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைந்தேன். 1984ம் ஆண்டு முதல் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.

நான் இவ் ஆணைக்குழுவில் செய்யாத பணிகள் இல்லை, வாக்கு பெட்டிகளையும் சுமந்துள்ளேன். அனைவருக்கும் மிக்க நன்றி” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகி மாலை ஐந்து மணி வரையில் இடம்பெற்றிருந்தன.

நாடளாவிய ரீதியில் சுமார் 71 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்