புதிதாக அமைக்கப்பட்ட நந்திஸ்வரர் சிலை திறப்பு நிகழ்வு

 

 வரலாற்று சிறப்புப் பெற்ற சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்தின் இராஜகோபுரத்தின் முன்பாக நந்திஸ்வரர் புதிதாக நிர்மானிக்கப்பட்டு ஆலயத்தின் வன்னிமை மற்றும் வண்ணக்குமார் தலைமையில் குடமுழுக்குப் பெருவிழா இடம்பெற்றது.

 இராஜகோபுரத்தின் முன்னால் அமைப்பப்பட்ட நந்திஸ்வரர் ஆலய நேர்த்திக்கடன் தீர்க்கும் முகமாக பக்தர் ஒருவரின் முயற்சியின் காரணமாக பல இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்ட நிலையில் பிரதிஸ்டை பூர்வாங்க கிரியைகள் இடம்பெற்று; வேத பாராயணம் முழங்க முருகப் பெருமானுக்கு விசேட அபிசேக பூசைகள் இடம்பெற்று யாக பூசைகள் நடைபெற்று முடிந்ததும் பிரதான கும்பம் சகிதம் ஆலயத்தை வலம் வந்து பக்தர்களின் அரோகரா கோசத்துடன் நந்தீஸ்வரருக்கு முடமுழுக்கு நடைபெற்றது.

 குறித்த நந்தீஸ்வரர் குடமுழுக்குப் பெருவிழாவிற்கு பெருமளவான பக்தர்கள் மற்றும் உபயகாரர்கள் என பலரும் குடமுழுக்கு நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தனர்.

 ஆலயத்தில் இடம்பெற்ற நந்தீஸ்வரர் குடமுழுக்குப் பெருவிழாவிற்கு கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைக்கு ஏற்ப வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்