பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

 

 

பாறுக் ஷிஹான்

தேசிய நல்லிணக்கம் சமூக ஒற்றுமை எனும் தொனிப்பொருளில் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(17) இடம்பெற்றது.

 இந்நிகழ்வானது அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றதுடன்   பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக  குறித்த உபகரணங்கள் யாவும் மத்தியமுகாம் 3 பகுதியைச் சேர்ந்த 11 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதுடன் இப்பொருட்களில் தையல் இயந்திரங்கள் இலத்திரணியல் தராசுகள் இடியப்பம் அவிக்கும் உபகரணம் சிற்றூண்டி விற்பனைக்கு தேவையான பொருட்கள் என்பன உள்ளடங்குகின்றன.

இப்பொருட்களை சுவாட்(sword) அமைப்பு  மற்றும் யு.எஸ்.எயிட்(Usaid) ஊடாக குளோபல் கொம்மினுடிஸ் பாட்னர்ஸ் போ குட்(Global communties partners for good)  என்ற நிறுவனத்தின் ஊடாக வழங்கியுள்ளதுடன் உதவிப் பிரதேச செயலாளர் என்.நவனீதராஜா, நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி  ஆர்.லதாகரன் உட்பட நிறுவன அதிகாரிகள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பற்குணராசா தயாளராஜ் ,கிராம சேவை உத்தியோகத்தர் கிருஸ்ணபிள்ளை மதன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்