ஹிஸ்புல்லாவின் மட்டு பல்கலைக்கழகத்திற்கு மேலும் நெருக்கடி; பதில் சொல்கிறார் ஹிஸ்புல்லா

 


மட்டக்களப்பு  பல்கலைக்கழகம் கொரோனா பரிசோதனை நிலையமாக தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிற நிலையில் அது இன்னும் விடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக உரிமையாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான ஹிஸ்புல்லாஹ் இதனை இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில்இ

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்.

அத்துடன் கடந்த தேர்தல் முடிந்த கையோடு என்மீதான போலியான பிரச்சாரங்கள் திட்டமிட்டு எமது எதிர்த் தரப்பால் பரப்பப்பட்டு வருகின்றது. அதன் தொடரில் கொரோனா சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வரும் எமது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அரசால் விடுவிக்கப்பட்டிருப்பதாக சிலர் போலிச் செய்தி பரப்பி வருகின்றனர்.

எனினும் அந்த தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்பதுடன் எமது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்ந்தும் கொரோனா சிகிச்சை நிலையமாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதனை உங்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றேன்

எனது உத்தியோகபூர்வ முகநூல் அல்லாது வேறு தளங்களில் பகிரப்படும் இவ்வாறான உறுதிப்படுத்தபடாத தகவல்களை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.