வீட்டை பலப்படுத்தி எமது இருப்பை உறுதி செய்வோம்.

 


ஆயுத போராட்ட முடிவுக்குப் பின் விடுதலைப் புலிகளின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்த முடிவையும் இலங்கை அரசுக்கு நிகராக சமவலுவுடன் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் போன்று உடனுக்குடன் எடுத்துக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் நன்குணரவேண்டும். இன்று இலங்கைக்குள் ஓர் அரசியல் கட்சியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.

மாற்றம் என்ற சொல்லுக்குள் போலித் தேசியவாதத்தை புகுத்தி, மக்கள் மத்தியில் போலித் தேசியவாத சிந்தனைகளை விதைத்து, உணர்ச்சி அரசியல் பேசி, மக்களை சுயசிந்தனை ஆற்றவர்களாக எண்ணி, சிங்கள தலைமைத்துவ கட்சிகளுக்கு எமது வாக்குகளை சிதறடித்து தம் எதிர்கால சந்ததியின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் நிலைக்குள் தள்ளாதீர்கள்.

எமது தேசியத் தலைவரால் அரசியல் ரீதியான நகர்வுக்காக கட்டப்பட்ட வீட்டுக்குள் உள்ள தலைமைகளை எங்கள் வாக்குப் பலத்தால் பேரம் பேசும் சக்திகளாக மாற்றுவதோடு சர்வதேச அரங்கில் எங்களின் குரல்களாக வாக்களிப்போம்.

உணர்ச்சி அரசியலுக்குள் சிக்காது யதார்த்த அரசியலை புரிந்து வாக்களிப்போம்.அமலன்


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்