ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் களுதாவளை மக்கள் சந்திப்பு

 

 


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் களுதாவளை பிரதேச மக்கள் சந்திப்பு இன்று கட்சியின் களுதாவளை பிரதேச இணைப்பாளர் திசைவீரசிங்கம் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

பிற்பகல் 3.00 மணியளவில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா அவர்களின் தலைமையில் குறித்த சந்திப்பு  இடம்பெற்றது.

இதன்போது, குறித்த பிரதேச மக்கள் தாம் எதிர்நோக்கும் பல்வேறு அன்றாட பிரச்சினைகளையும்  மீன்பிடி தொடர்பான பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டினர். மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை கேட்டறிந்த மாவட்ட அமைப்பாளர் , இப்பிரச்சினைகளை கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று விரைந்து தீர்வுகளை பெற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.

மாவட்ட அமைப்பாளர் சிவானந்தராஜா உரையாற்றும்போது தற்போது மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை அன்றாட பிரச்சினைகளை மட்டுமல்லாது தமிழ்மக்கள் எதிர்நோக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வுகாணவேண்டியுள்ளது. இந்திய அரசின்  ஆதரவோடு ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதே அரசியல் தீர்வுக்கான சிறந்த வழியாகுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனக்குறிப்பிட்டார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு 13வது திருத்தச் சட்டத்திலேயே உள்ளடங்கியுள்ளது என்பதை ஆரம்பத்திலிருந்து இன்றுவரை வலியுறுத்திவரும் ஒரேயொரு கட்சியென்றால் அது ஈழமக்கள் ஜனநாய கட்சிதான். எனவே, 13வது திருத்தசட்டம் மூலம் அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகானவேண்டுமானால், வடக்கு மக்களோடு எமது கிழக்கு மக்களும்  இணைந்து எமது கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்கொழில் அமைச்சருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களை பலப்படுத்தவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

இம்மக்கள் சந்திப்பில், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் அகிலன், கட்சியின் மாவட்ட நிர்வாக செயலாளர் ஆசைத்தம்பி, கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்