மருதமுனை கடற்கரை வீதியை காபெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம்

 

 

பாறுக் ஷிஹான்

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மருதமுனை கடற்கரை வீதியை காபெட் வீதியாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

மருதமுனை பிரதேசத்திற்குட்பட்ட பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவு முதல் பாண்டிருப்பு முஸ்லிம் பிரிவு வரையிலான வீதியே இதன்போது அபிவிருத்தி செய்யப்படவுள்ளது

கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரபல்யமான கடற்கரைகளில் மருதமுனையும் ஒன்று. இக் கடற்கரைக்கு இன-மத வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் வருகை தருவர். விஷேட தினங்களில் மக்களின் வருகை அதிகரித்துக் காணப்படும். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்படும் சன நெருக்கடியை சமாளிக்க முடியாதளவு உள்ள இவ்வீதியின் அபிவிருத்தி குறித்து கடந்த காலங்களில் பொதுமக்களால் சுட்டிக் காட்டப்பட்ட போதும் தற்போதை அரசு அதனை முன்னெடுத்து வருவது குறித்து மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்