பொதுஜன பெரமுன முஸ்லிம் எம்.பிக்களுக்கு புதிய வரவேற்பு விழா!

 

 

ஏ.எஸ்.எம்.ஜாவித் 


இம்முறை தேர்தல் மூலமும் தேசியப்பட்டியல் மூலமும் பாராளுமன்றத்திற்கு தெரிவான பொதுஜன பெரமுனை கட்சியின் நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்று தெஹிவலை ஸஹ்ரான் வரவேற்பு மண்டபத்தில் இடம் பெற்றது.

பொதுஜன பெரமுனையின் முஸ்லிம் அமைப்பினால் அதன் தலைவர் உவைஸ் ஹாஜியார் மற்றும் ராசின் ஸறூக் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் சட்டத்தரணி அலி ஷப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.