வாகரை மரியன்னையின் விண்ணோற்பு பெருவிழா திருப்பலி

 

மரியன்னையின் விண்ணோற்பு பெருவிழா திருப்பலி வாகரை மாங்கேணி கடற்கரையில் உள்ள மரியண்ணையின் திருச்சொருபம் அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது.

 மட்டக்களப்பு குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகளாரின் தலைமையில் தலைமையில் மட்;டக்களப்பு மறைமாவட்ட நிதிப்பொறுப்பளார் அருட்பணி எஸ்.ஜெயநிக்சன் அடிகளாரும் மற்றும் பங்குத் தந்தை அருட்பணி ஜெமில்ரன் இருதயநாதன் ஆகியோர் சேர்ந்து அன்னை மரியாள் திருவிழா திருப்பணியை சிறப்பாக சிறப்பித்தனர்.

 இந்த திருப்பலியில் அனேகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 

திருவிழாவின் நிறைவில் இன மத பேதமின்றி மாதாவின் திருச்சொருபத்தினை கடலில் ஊர்வலமாக எடுத்துச் சென்று வணக்கம் செலுத்துவது பாரம்பரிய நடைமுறையாகும்.


இவ் நடவடிக்கையினால் மக்களிடேயே மாதாவின் மீது உள்ள பக்தியை மேலும் வளர்ச்சியடையச் செய்யும் வழக்கமாகும்.