மாவை – சுமந்திரன் இடையில் சமரச பேச்சுவார்த்தை!

 

 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தை பல மணிநேரமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

யாழ் புறநகர் பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான விடுதியில் சுமார் 3 மணித்தியாலமாக நடக்கும் சந்திப்பு, தற்போது இரவு 10 மணி கடந்தும் நீடித்து வருகிறது.

மாவை சேனாதிராசாவிற்கு எதிராக சதி நடவடிக்கையில் ஈடுபட்டதாக சுமந்திரன் தரப்பினர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், மாவை சேனாதிராசாவுடனான இணக்கப்பாட்டு முயற்சியில் சுமந்திரன் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இதற்காக யாழ் பல்கலைகழக மருத்துவபீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தரப்பை சுமந்திரன் அணுகியிருந்தார். இதன்படி மாவை சேனாதிராசாவை அவரது வீட்டில் சந்தித்து பேசிய வைத்தியர் குழு, இன்று மாவை சேனாதிராசாவை நேரடி பேச்சுக்கு அழைத்திருந்தனர்.

கச்சேரிக்கு அண்மையிலுள்ள வைத்தியர் ஒருவரின் விடுதியில் வைத்தியர் குழுவினருடன் பேச்சுவார்த்தை என மாவை சேனாதிராசா அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அங்கு திடீரென எம்.ஏ.சுமந்திரனும் பிரசன்னமாகியிருந்தார்.

மாவை சேனாதிராசா, எம்.எ.சுமந்திரன், மருத்துவபீடாதிபதி ரவிராஜ், மற்றும் சில வைத்தியர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்